ஒவ்வொரு வருடமும் போல் இந்த ஆண்டும் பாவை மஹோத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இந்த ஆண்டு இரண்டு நாள் சங்கீத உபன்யாசம் கதிராமங்கலம் ஸ்ரீ ஆர் எஸ் கணேசன் மற்றும் குழுவினர்கள் கல்லூர் ஸ்ரீ கே எஸ் காசிராமன் பாட்டு,மணிக்குடி ஸ்ரீ சந்திரசேகரன் மிருதங்கம் , ஸ்ரீமதி ஹரிணி ஸ்ரீவத்சா வயலின் இசையுடன் கூடிய நாரத வால்மீகி ஸம்வாதம் மற்றும் சுந்தரகாண்டம் (வால்மீகியும் தியாகராஜரும்) என்ற தலைப்பில் இனிதே நடந்தேறியது.
சிங்கப்பூரில் வசிக்கும் பேபி ரக்க்ஷனா (இரண்டாம் வகுப்பு பயிலும்) இரண்டு பாடலுக்கு பரதநாட்டியம் ஆட இரவு பதினோரு மணிக்கு கேசரி பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.
வழக்கம் போல் இந்த ஆண்டு அஷ்ட லக்ஷ்மி அலங்காரம் உற்சவருக்கும், மூலவருக்கு ஆண்டாள் கொண்டையுடன் பச்சை கிளியுடன் கூடிய ஆண்டாள் அலங்காரமும் வேங்கடக்ருஷ்ண பட்டாச்சாரியார் சிறப்பாக செய்து இருந்தார்.
வீடியோக்கள் யூ டியூபில் பதிவிறக்கம் செய்து உள்ளேன், கண்டு களிக்கவும்.
No comments:
Post a Comment