Pages

Wednesday, June 15, 2011

அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது


?ui=2&view=att&th=1256765dae601cbc&attid=0.1&disp=attd&realattid=ii_1256765dae601cbc&zw

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்.,அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை.நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு,ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!

How to stop pesky calls and SMSes


Effective: Feb 1 2011

Don't want to be annoyed by unwanted commercial calls and SMSes? Here's all that you should know about Telecom Regulatory Authority of India's (TRAI) new regulations to give your mobile phone a little rest.

Under the new guidelines set by TRAI, consumers can choose their preference to receive or not to receive commercial communication from seven pre-defined categories. Users also have the option to either block all commercial calls and SMSes or to block only commercial calls while receiving SMSes of their choice.

Consumers have two choices, they can register in one of the two categories:

1. Fully blocked category: Consumers will not receive any commercial communication on their phones either as voice calls or SMSes.

2. Partially blocked category: Consumer will not receive any voice calls, but can choose to receive SMSes on any or some or all from seven pre-defined subjects:

a. Banking/insurance/financial products/credit cards

b. Real estate

c. Education

d. Health

e. Consumer goods and automobiles

f. Communication/broadcasting/entertainment/IT

g. Tourism and leisure

For users already registered with the National Do Not Call Registry (NDNC) do not have to re-register, their registration will automatically continue under the 'fully blocked' category.

The request for registration on the National Customer Preference Register (NCPR) will effective in seven days from the date of request for registration.

There are no charges involved in the registration, re-registration or change in registration process.

HOW TO REGISTER

There are four ways to activate your choice:

1. Via SMS sent to 1909

2. Dial 1909 and register through IVRS (Interactive Voice Response System)

3. Dial 1909 and register with the help of a customer care executive

4. Through the websites of mobile service providers

Registration via SMS

To opt for the fully blocked category, send SMS "START 0" to 1909.

To opt for the partially blocked category, send SMS "Start [option]" to 1909. The options are explained:

- "START 1" for receiving SMS relating to banking/insurance/financial products/credit cards

- "START 2" for receiving SMS relating to real estate

- "START 3" for receiving SMS relating to education

- "START 4" for receiving SMS relating to health

- "START 5" for receiving SMS relating to consumer goods and automobiles

- "START 6" for receiving SMS relating to communication/broadcasting/entertainment/IT

- "START 7" for receiving SMS relating to tourism and leisure

To opt for multiple preferences from the categories send SMS "Start [option1, option2, option3,...]" to 1909. For example, for receiving commercial SMSes from banking/insurance/financial products/credit cards and real estate, send the SMS as "START 1, 2".

In case a preference "0" is mentioned in the SMS, it will override other preferences and will be treated as 'fully blocked.' For example, "START 0,1,7", will be considered as a fully blocked option.

On sending the SMS, users will receive a confirmation SMS and need to reply to the message to ensure the options chosen are implemented.

On receiving the confirmation SMS from the subscriber, the service provider will send another SMS indicating the user's preferences along with a unique registration number. It is advisable to save the unique registration number as this will serve as a reference for the subscriber's registration of preference.

Registration via IVRS

Consumers can call the toll-free number 1909 and then follow the instructions to indicate their choice of blocked voice calls and SMSes. On successful competition of the IVRS process the consumer will receive a confirmation SMS that also mentions the consumer's unique registration number.

Registration through customer care executive

Consumers can call the toll-free number 1909 and speak to a customer care executive to indicate their preferences. The consumer will receive a confirmation SMS along with their unique registration number.

Registration via service provider websites

Users can also log in to their respective access providers' websites to register their preferences.

List of mobile service providers' websites:

Aircel: http://www.aircel.com

Bharti Airtel: http://www.airtel.in/

BSNL: http://www.bsnl.co.in

HFCL: http://www.hfclconnect.com

IDEA: http://www.ideacellular.com

Loop Mobile: http://www.bplmobile.com

MTNL Delhi: http://www.mtnldelhi.in

MTNL Mumbai: http://mumbai.mtnl.net.in

Reliance Communication: http://www.rcom.co.in

Reliance Telecom: http://www.reliancemobile.com

Shyam: http://www.hellorainbow.com

Spice Punjab: http://spiceindia.com

Spice Karnatka: http://spicetele.com

Tata: http://tataindicom.com

Unitech: http://www.uninor.in

Videocon: http://www.videocon.com

Vodafone: http://www.vodafone.in

HOW TO CHANGE PREFERENCES

Consumers can change their preferences after three months of the date of registration or three months after the last change of request. This can be done through any of the four methods described above, i.e., SMS, IVRS, customer care executive or online.

For changing preferences through SMS consumers will have to SMS "START [option]" to 1909 to receive communication on a certain category or "STOP [option]" to stop receiving messages from the indicated category. In case a consumers want to fully block all categories they can SMS "START 0" to 1909.

Users can alternately change their preferences via IVRS or speaking to a customer care executive by dialling 1909 or by visiting the mobile service providers' websites. On successful completion a confirmation SMS will be sent.

HOW TO DE-REGISTER

Consumers can opt out of the service through SMS by sending "STOP" to 1909. They can also call 1909 to de-register through IVRS or by speaking to the customer care executive.

HOW TO REGISTER A COMPLAINT

If a consumers receives unsolicited commercial communication even after seven days of registering with the NCPR they can file a complaint either by SMS or dialling the toll-free number 1909.

To register a complaint via SMS a message in the format "COMP TEL NO XXXXXXXXXX, dd/mm/yy, Time hh:mm" to 1909, where "XXXXXXXXXX" is the telephone number or the ID from which the SMS was sent from and also mentioning the date and time when the unsolicited communication was received.

On submission of the complaint the user will be sent a unique complaint number through SMS and will be informed of the action taken on the complaint within seven days of the complaint booking.


ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு



*Please read and send it to Ur friends and Relatives...* *
ரூ**10**ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌**.*

*ரூ**10 **செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு** *

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட,
பலனைத்தந்த
வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது
பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும்
ஒப்பிடமுடியாதது.
அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ”
தோழி” என்பவரின் பதிவு படித்தேன்.

அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10
செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த
பதிவுன் நோக்கம்.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு
பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே
போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன்
எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள்
சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும்
என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை
செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு
உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும்
தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு
இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும்
அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம்
குறைவானதால் வந்துவிட்டது போலும்.

வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர்
பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள்.
அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம்
உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம்
சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில்
கட்டச் சொல்லியிருந்தார்.

வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில்
எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி
நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான்
அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர்
போலும்).

அந்த காய்கறியின் பெயர் *ஃபிரஞ்சு பீன்ஸ்(**French beans) , *திரவத்தின் பெயர்
*தண்ணீர்* (அட வீட்ல நாம தினமும் குடிக்கிறதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதளத்தில் சொன்னது போல்):*

( ¼ ) **கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) **`**ரூ**
10-**க்கு வாங்கி**, **விதை நீக்கி**, **தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது *
*2 **மணிநேரம்)**, **மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு**, 10 **நிமிடம்
கழித்து**, 2 **லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும்**, **இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.** *

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மணிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை
அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு
கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு
சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர்
பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர்
வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை
நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும்.
கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும்
வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே
போயிந்தி.. இட்ஸ் கான்...

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு `
இருவதாயிரத்திலிருந்து
` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல்
பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதளத்தில் அலைந்தபோது
படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல்
உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம்,
அதனால், இதை நாம் கல் உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை
தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு
கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபிள்
ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு
பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம்
தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின்
அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை
உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும்
2 லிட்டரிலிருந்து
3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொறுக்க முடியாதவர்கள் மருதுவரிடம்
சென்றுவிடுவதே நல்லது.

டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக
பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

டிஸ்கி *3 : *இந்த ஆலோசனை இலவசம் தான்*, *யாரும் இதற்காக எனக்கு பணம்!!! அனுப்ப
வேண்டாம். வேண்டாம்

courtesy :
SIVAGANESH. M
DEVELOPMENT OFFICER,
LIC OF INDIA, MANNARGUDI
CELL 9443218517, 9894867517