Pages

Wednesday, February 23, 2011

ராதா கல்யாணம் 13/02/2011 at Thippirajapuram







ராதா கல்யாண மகோத்சவம் வெகு விமரிசையாக திப்பிராஜபுரத்தில் கடந்த 12/02 & 13/02/2011 அன்று நடைபெற்றது. உடையாளுர் கல்யாணராம பாகவதர் , ஈ கே சீனு பாகவதர் , ஈ கே ஜெயராம பாகவதர் மற்றும் எண்ணற்ற பாகவதோத்தமர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . மருதானல்லூர் சற்குரு சுவாமிகள் தலைமையில் , திவ்ய நாமம் நடைபெற்றது . தி.புர வாசிகள் பலர் கலந்துகொண்டு கல்யாண மகோத்சவத்தை கண்டுகளித்தனர் . City Union Bank Executive President Dr N Kamakodi , Chairman Sri P Vaithyanathan , Dalmiya cements N Gopalsamy மற்றும் பலர் கண்டுகளித்தனர் . மாலை கோணங்கி தாசர் , சுவாமி வீதி உலா நடைபெற்றது. உற்சவர் படம் பிரசுரிக்கபட்டு உள்ளது. பனி மூட்டம் போட்ட பெருமாள் , தாயார் சிறப்பு அலங்காரம் பட்டாசாரியார் வேங்கடக்ரிஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் செய்து இருந்தார்கள் . உணவு உபசரிப்பு அண்ணாவாத்து கிருஷ்ணன் ஆத்தில் கண ஜோராக இருந்தது. தி புர சிறுமிகள் முருகன்,வள்ளி ,தேவசேனை , கிருஷ்ணன்,ராதா,ருக்மணி வேஷம் போட்டு கலக்கினர். முத்தாய்ப்பாக , பாகவதர் ஒருவர் ஒளவ்வையார் , துக்காராம் , அசட்டு பஞ்சாமி என வேஷம் போட்டு பார்வையாளர் அனைவரையும் மிரளவும் , சிரிக்கவும் , அச்சர்யபடவும் வைத்தார். இந்த ராதா கல்யாண வைபவத்தில் இவருக்கு அசத்தல் மன்னன் / அசத்தல் பாகவதர் என்று பட்டம் தந்தாலும் தகும்.